வாக்குப்பதிவு நேரம் : தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:58 pm
first-phase-election-the-voting-time-in-of-the-parliamentary-constituencies

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம், தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், தொகுதிகளை பொருத்து மாறுபடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில்  ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஓடிசா, மேகலாயா உள்ளிட்ட மாநிலத்தி்ல் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கும் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேர்தல் தினத்தில் வாக்குப்பதிவுக்கான நேரம்  தேர்தல் நடைபெறும் மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதாவது, நாளை மறுதினம் (ஏப்.11)  தேர்தல் நடைபெறும் பெரும்பாலான தொகுதிகளில், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம். 

அதேசமயம், இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம் உள்ள தொகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் வாக்குப்பதிவு நேரம், காலை 7 மணி முதல் மாலை 3 அல்லது 4 அல்லது 5 மணி வரை என, தொகுதிகள் அமைந்துள்ள இடத்தை பொறுத்து மாறுபடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close