அமேதி தொகுதியில் ராகுல் இன்று வேட்புமனுத் தாக்கல் !

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 08:41 am
rahul-s-nomination-in-uttarpradesh-amedhi

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், வயநாடு, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய இரணை்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.  வயநாடு தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.  

இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.  முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு ஊர்வலாமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அமேதியில் 6-ஆம் கட்டமாக மே 6-ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close