பாஜகவுக்கு தேச பக்தியெல்லாம் கிடையாது - டி.ஆர்.எஸ். கட்சி விலாசல்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 10:09 am
bjp-does-nt-have-any-patriotism-kavitha-m-p

பாஜகவுக்கு தேசபக்தி என்பதெல்லாம் கிடையாது என்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி.யும், வேட்பாளருமான கவிதா தெரிவித்துள்ளார். இவர் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் ஆவார்.

நாட்டில் தேச பக்தியுடன் இருக்கின்ற ஒரே கட்சி நாங்கள்தான் என பாஜகவினர் கூறுவார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்கு அதெல்லாம் கிடையாது. ஏனென்றால் ஒரேயொரு மதத்தை ஆதரிப்பது தேசபக்தி ஆகாது. நாட்டிலேயே அனைத்து மதங்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஒரே கட்சி டி.ஆர்.எஸ்.தான்.

மக்களுக்கு என்ன வேண்டும் என்பது குறித்து பாஜகவும், காங்கிரஸும் கடந்த 5 ஆண்டுகளில் கண்டு கொண்டதே கிடையாது. ஆனால், கடந்த 20 நாட்களுக்கு மக்களிடம் அவர்கள் அன்பு பாராட்டி வருகின்றனர். மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக, தெலுங்கானாவுக்கு ஏன் பொருளாதார உதவியை வழங்க இயலவில்லை? என்றார் கவிதா.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close