மத்தியபிரதேச முதலமைச்சரின் மகன் சொத்துமதிப்பு 660 கோடி ரூபாய்

  ஸ்ரீதர்   | Last Modified : 10 Apr, 2019 01:02 pm
nakul-nath-richer-than-father-kamal-nath-declares-assets-worth-rs-660-crore

மத்தியபிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அம்மாநில முதலமைச்சரின் மகன் நகுல்நாத், தனது சொத்து மதிப்பு 660 கோடி ரூபாய் என வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள நகுல்நாத், பாஜக வேட்பாளர் நாதன்ஷாவை எதிர்த்து சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். 

இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், உடன் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் அசையும் தனது சொத்துக்கள் 615 கோடி ரூபாய் மதிப்புடையது எனவும், அசையாக சொத்துக்கள் 41 கோடி ரூபாய் மதிப்புடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மனைவி பிரியா பெயரில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close