குடும்பத்தோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 01:02 pm
rahul-gandhi-filed-nomination-in-amethi

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மனு தாக்கல் செய்தார். அவரது தாயார் சோனியா காந்தி, தங்கை பிரியங்கா வத்ரா உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அப்போது ராகுலுடன் வந்திருந்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி இந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் அவர் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அமேதி தொகுதியிலும் இன்று அவர் மனு தாக்கல் செய்தார். முன்னதாக திறந்தவெளி ஜீப்பில் ராகுல் காந்தி ஊர்வலமாக வந்தார். அப்போது, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா வத்ரா, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, இவர்களது மகன் ராக்கைன், மகள் மிராயா ஆகிய அனைவரும் ராகுலுடன் வந்திருந்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close