நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார் ராகுல்: அமைச்சர் நிர்மலா குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:01 pm
rahul-gandhi-s-statement-on-sc-rafale-verdict-verge-on-contempt-of-court-nirmala-sitharaman

"ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நீதிமன்றம் சொல்லாததை எல்லைாம் சொல்லி, மக்கள் மத்தியில் பாெய் பிரசாரம் செய்வதன் முலம், காங்கிரஸ் தலைவர் ராகுல் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார்" என, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: 

"ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக, உச்சநீதிமன்றம் ஒருபோதும் கூறவில்லை. அதே போல், இது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்த சி.ஏ.ஜி.,  இதில், எவ்வித முறைகேடும் இல்லை அதன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 

குறிப்பிட்ட சில செய்தி நிறுவனங்கள், ரபேல் ஒப்பந்தத்தின் ஒரு சில பக்கங்களை மட்டும் திருடி அதை வெளியிட்டு, இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. 

அவ்வகையான ஆவணங்களையும், இந்த வழக்கு விசாரணையின் போது சரிபார்ப்பதாக, நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, அது நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கு குறித்து, தவறான கருத்துக்களை, ராகுல் திட்டமிட்டே பரப்பி வருகிறார். 

நீதிமன்றம் சொல்லாததை எல்லாம் சொல்லி, மக்களை திசை திருப்ப முயல்கிறார். இது சட்டப்படி குற்றமாகும். நீதிமன்ற அவமதிப்பு செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளார். 

காங்., தலைவர் ராகுலின் மாெத்த குடும்ப உறுப்பினர்களும் ஜாமினில் வெளியே சுற்றித் திரிகின்றனர். ஒவ்வொருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படிப்பட்ட நபர், ஒரு சிறு குற்றச்சாட்டுக்கு குட ஆளாகாத பிரதமர் நரேந்திர மாேடியை திருடன் என்ற வகையில் பேசி வருகிறார். 

அமேதியில் மனுத் தாக்கலுக்கு சென்ற அவர், பல்வேறு நில மாேசடியில் ஈடுபட்ட ராபர்ட் வாத்ராவின் மனைவியும், தன் சகோதரியுமான பிரியங்காவை உடன் அழைத்து செல்கிறார். இப்படிப்பட்டவர் தான், பிரதமர் மாேடி மீதும், இந்த அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். 

எல்லா தடைகளையும் தாண்டி, பொய்யான குற்றச்சாட்டுகளை தகர்த்து, திட்டமிட்டபடி, ரபேல் போர் விமானங்கள் விமானப்படையுடன் இணைக்கப்பட்டு வானில் பறக்கும். 

இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close