உ.பி.,யில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., திடீர் மரணம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 05:54 pm
bjp-mla-from-agra-has-passed-away

உத்தர பிரதேசத்தில் ஆளும், பா.ஜ.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெகன் பிரசாத் கார்க். பா.ஜ.க.,வை சேர்ந்த இவர், இன்று காலை திடீரென அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

உடல் சோர்வு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கார்க் உயிரிழந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மக்களவை தேர்தல் சமயத்தில் எம்.எல்.ஏ., கார்க் உயிரிழந்த சம்பவம், ஆக்ரா பகுதி பா.ஜ.,வினரிடையே அதிர்ச்சியையும், சாேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close