4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 09:48 am
assembly-voting-begins-in-4-states-including-andhra-sikkim

ஆந்திரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, ஒருசில மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4 கட்டத் தேர்தலாக நடைபெறும் ஒடிஸாவில் இன்று முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளும், சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. அருணாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 3 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிஸாவில் 147 தொகுதிகள் உள்ள நிலையில் இன்று 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close