காங்கிரஸ் கட்சி பச்சை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது - யோகி ஆதித்யநாத்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 02:52 pm
congress-i-s-affected-by-green-virus-yogi-adityanath

காங்கிரஸ் கட்சி பச்சை நிற வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்தார். 
கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தபோது, அதன் கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக் தொண்டர்கள் கொடியுடன் திரளாக வந்திருந்தனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ரே பரேலியில் யோகி ஆதித்யநாத் நேற்று பிரசாரம் செய்தபோது காங்கிரஸை விமர்சித்தார். “கேரளாவில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தபோது ஒரே பச்சை நிறமாகக் காட்சியளித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். காங்கிரஸ் கொடியை எங்குமே காணவில்லை. அக்கட்சி பச்சை நிற வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் உள்ள வளங்களை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை முஸ்லிம்களுக்கு மட்டும்தான் உண்டு என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை தெரிவித்தார். அப்படியானால் நாட்டில் உள்ள பிற மக்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியிடம் முன்வைக்கிறேன்’’ என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close