ரேபரேலி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 11:56 am
sonia-gandhi-to-file-nomination-from-rae-bareli

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 

இத்தொகுதியில் சோனியாகாந்தி, 2004, 2006, 2009, 2019 என 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ரேபரேலி சென்றுள்ள சோனியா காந்தி இன்று பேரணியில் உரையாற்றுகிறார். இத்தொகுதிக்கு 5 ஆம் கட்டமாக மே 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 

சோனியா காந்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close