உத்தரப்பிரதேசம்- வாத்தியங்கள் முழங்க மலர் தூவி வாக்காளர்களுக்கு வரவேற்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 12:09 pm
flower-petals-being-showered-and-dhol-being-played-to-welcome-voters-in-uttarpradesh

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பக் மாவட்டம், பராவ்த் நகரில் உள்ள பூத் எண் 126-ல் வாக்காளர்களை மேளதாளத்துடன் மலர் தூவி வரவேற்றனர்.

வாக்குச்சாவடி நுழைவு வாயிலில் என்சிசி மாணவர்கள் நின்றுகொண்டு, பேண்டு வாத்தியம் முழங்க மலர் தூவி வாக்காளர்களை வரவேற்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close