மீண்டும் வெற்றி பெறுவேன் - நிதின் கட்கரி நம்பிக்கை

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 11:54 pm
nitin-gadkari-hopes-to-win-again-in-nagpur

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி இன்று காலை வாக்களித்தார். மீண்டும் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.

நாக்பூர் தொகுதியில் கட்கரியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் நானா படோல் போட்டியிடுகிறார். இந்நிலையில், அத்தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. நிதின் கட்கரி, காலை 10 மணியளவில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வந்து வாக்களித்தார். 

பின்னர் பேசிய அவர், “உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக சக்தி இந்தியாதான். மொத்த உலகமும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் திரளாக வந்து வாக்களிப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து வாக்கு கேட்டேன். மக்கள் அதற்கு ஆதரவளித்தனர். ஆகவே, கடந்த முறையைக் காட்டிலும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close