எந்தெந்த மாநிலங்கள், தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு?

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 12:18 pm
20-states-91-constituencies-polling-today

நாட்டின், 17வது மக்களவை தேர்தல், இன்று துவங்கி, அடுத்த மாதம், 19ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதில், இன்று, 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில், முதல்கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்தமான் நிக்கோபார் - 1, ஆந்திரா - 25, தெலுங்கானா - 17, அருணாச்சல பிரதேசம் - 2, அசாம் - 5, பீஹார் - 4, சத்தீஸ்கர் - 1, ஜம்மு - காஷ்மீர் - 2, லட்சத்தீவுகள் - 1, மஹாராஷ்டிரா - 7, மணிப்புர் -1, மேகாலயா - 2, மிசோரம் - 1, நாகாலாந்து - 1, ஒடிசா - 4, சிக்கிம் - 1, திரிபுரா - 1, உத்தர பிரதேசம் - 8, உத்தரகண்ட் - 5, மேற்கு வங்கம் - 2 என, மாெத்தம், 91 தொகுதிகளில் இன்று ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. 

இவற்றில் சில நக்சல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளாகவும், சில ஸ்டார் வேட்பாளர்கள் களம் இறங்கும் தொகுதியாகவும் இருப்பதால், இங்கு நடைபெறும் ஓட்டுப் பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஆந்திராவில் இன்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவும் நடைபெறுவதால், அந்த மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close