இன்றைய முதல்கட்ட தேர்தலின் சிறப்பம்சங்கள் - வாங்க படிக்கலாம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 12:42 pm
ten-interesting-facts-about-first-phase-polls

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதுகுறித்த சிறப்புத் தகவல்கள் இதோ:

ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், மேகாலயா, உத்தரகாண்ட், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. 
அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம், மணிப்பூர், ஒடிஸா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஒருசில தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாட்டிலேயே மிக அதிகபட்சமான மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இன்று சஹாரன்பூர், கைரானா, காஸியாபாத் உள்பட 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஆந்திரா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களுக்கு உள்பட்ட 50 இடங்களில் இன்று காலை வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு, மகேஷ் சர்மா, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகனுமான அஜீத் சிங் உள்ளிட்ட வேட்பாளர்கள் இன்றைய களத்தில் உள்ளனர்.

வேளாண் துறை மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும், நடுத்தர மக்களுக்கான வரி குறைக்கப்படும், ரு.100 லட்சம் கோடி அளவில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேம்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளுடன் ஆளுங்கட்சியான பாஜக தேர்தலை சந்திக்கிறது.

அதே சமயம், வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான வாக்குறுதியுடன் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தாலும், இந்தத் தேர்தலில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close