தேர்தல் வன்முறை: தெலுங்குதேசம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 01:40 pm
tdp-executive-dead-at-clashes-in-booth

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் தாடிபத்ரி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், தெலுங்கு தேசம் - ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது.  இதில், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close