அமேதியில் ஸ்ம்ரிதி இரானி; ரேபரேலியில் சோனியா காந்தி வேட்புமனுத்தாக்கல்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 02:58 pm
smriti-irani-sonia-gandhi-to-file-nominations-shortly-after-mega-rallies

மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இன்று உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதற்காக அவர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பேரணியாக சென்று, மக்களிடம் வாக்கு சேகரித்து பின்னர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று ஸ்மிரிதி இரானி அத்தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, இன்று ரேபரேலி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரும், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னதாக, அப்பகுதியில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close