ஆந்திரப்பிரதேசம்- தோ்தல் வன்முறையில் இருவா் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 03:36 pm
andhra-1-dead-in-clashes-in-phase-1-of-voting

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் இருவா் உயிரிழந்துள்ளனர். அங்கு மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் வீரப்புரம் கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடைய மோதல் ஏற்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த தொண்டா் ஒருவரும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த ஒருவரும் இந்த மோதலில் உயிாிழந்தனா்.

மேலும் இந்த மோதலில் காயமடைந்த சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்திலும் இந்த இரு கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த மாநில சபாநாயகர் ஷிவபிரசாத் ராவ் மயக்கமடைந்தார்.

முன்னதாக குண்டூர் மற்றும் சித்தூரில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close