ஓட்டு பதிவு மையத்தில் துப்பாக்கி சூடு

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 03:08 pm
gun-shoot-at-up-poll-station

உத்தர பிரதேசத்தில், உரிய ஆவணங்கள் இன்றி, ஓட்டுப் பதிவு மையத்திற்கு வந்த சிலர், ஓட்டளிக்க அனுமதிக்கப்படாததால், அவர்கள் கலரவத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை விரட்டியடிக்க, சிஆர்பிஎப் வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

உத்தர பிரதேசத்தில், மாெத்தமுள்ள, 80 மக்களவை தொகுதிகளில், எட்டு தொகுதிகளில் இன்று ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், கைரானா தொகுதிக்குட்பட்ட, ஷாமிலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டுப்பதிவு மைத்திற்கு வந்த சிலர், உரிய ஆவணங்களை எடுத்து வரவில்லை. 

இதனால், அவர்களை ஓட்டளிக்க அனுமதிக்க முடியாது என, அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதை ஏற்க மறுத்த சிலர், அங்கேயே கலவரத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, அவர்களை விரட்டியடிப்பதற்காக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து, அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின், வழக்கம் போல், அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close