ராகுல் காந்தியை கொல்ல முயற்சி : காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 03:24 pm
congress-claims-sniper-threat-to-rahul-gandhi-s-life

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ராகுல் காந்தியை லேசர் குண்டு மூலம் கொலை செய்ய சதி நடந்ததாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகாரை அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் அவர், கடந்த 4 -ஆம் தேதி பாரம்பரிய வேட்டி சட்டை உடையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான அமேதி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் 3  கி.மீ. தூரம் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அந்த சாலை பிரசாரத்தின்போது பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோர் இருந்தனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தப்படி இருந்தனர். அவர்களுக்கு ராகுலும், பிரியங்காவும் கைகொடுத்தபடி உற்சாகப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது ராகுலை கொல்ல முயற்சி நடந்ததாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், அகமது படேல் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கையெழுத்திட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பாதுகாப்பு கேட்டு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், ராகுல் காந்தி மனு தாக்கல் செய்ய வந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாகதான் இருந்தன. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.

சாலை பிரசாரத்தின்போது அவரை நோக்கி லேசர் கதிர் வீச்சுகள் வந்தன. பச்சை நிறத்திலான அந்த கதிர்கள் அவரது தலையை குறிப்பார்த்து, குறிப்பாக இருமுறை அவரது வலது தலைப் பகுதியை நோக்கி வந்தன. இதுபோல் அந்த கதிர்கள் அவர் மீது 7 முறை பாய்ந்தது.

நீண்ட தூரத்திலிருந்து கொண்டு ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் காந்தியை கொல்ல சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

லேசர் கதிர் ராகுல் மீது பாய்ந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவம் எங்களுக்கு அச்சத்தை எழுப்பியுள்ளது என காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. அந்த கடிதத்துடன் ராகுல் மீது லேசர் கதிர்வீச்சு பாய்ச்சப்பட்டதற்கான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தெரிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close