எம்.எல்.ஏ., கொல்லப்பட்ட தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறு 

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 04:13 pm
voters-turn-up-in-large-numbers-in-chhattisgarh-s-dantewada-despite-bjp-mla-s-killing-in-maoist-attack

சத்தீஸ்கரில், பா.ஜ., - எம்.எல்.ஏ., கொல்லப்பட்ட தொகுதியில், வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று, ஆர்வமுடன் வாக்களித்து செல்கின்றனர். 

சத்தீஸ்கரின் பஸ்தர் மக்களவை தொகுதிக்குட்பட்ட, தந்தேவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,ஆக இருந்தவர், பீமா மாண்டவி. பா.ஜ.,வை சேர்ந்த இவர், காரில் சென்று கொண்டிருந்த போது, நக்சல்கள் நடத்திய வெடி குண்டு தாக்குதலில், பலியானார். இவருடன், நான்கு பாதுகாப்பு வீரர்களும் பலியாகினர். 

இந்நிலையில், தந்தேவாடா பகுதியில் இன்று முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அந்த தொகுதி வாக்காளர்கள், காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்து, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

வழக்கத்தை விட, அந்த தொகுதியில், வாக்குப் பதிவு சதவீதம் இம்முறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close