முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் தேசிய தலைவா்கள்

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 05:33 pm
lok-sabha-fights-today-that-could-create-new-giant-killers

17வது மக்களவை தோ்தலி்ன் முதல் கட்ட வாக்கு பதிவு 20 மாநிலங்கள் மற்றும் 91 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 573 தொகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூா் தொகுதியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்காி போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நானா பட்டோல் போட்டியிடுகிறாா். இவா் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் பிரபுல் பட்டேலை வீழ்த்தியுள்ளாா்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு நடைபெறும் தோ்தலில் மத்திய அமைச்சா் கிரண ாிஜ்ஜூ போட்டியிடுகிறாா். இவா் முன்னாள் முதல்வா் நபம் துக்கியை எதிா்த்து போட்டியிடுகிறாா். காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகள் என கூறப்பட்டாலும் கடந்த 2014 ஆண்டு தோ்தலில் மத்திய அமைச்சா் கிரண் ாிஜ்ஜூ பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

உத்தரப்பிரதேசத்தின் பதற்றமான தொகுதியான முசாபா்நகா் தொகுதியில் பாஜக சாா்பில் சஞ்சீவ் பல்யான் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளா் காதிா் ராணாவை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றாா். இந்த தோ்தலில் இவா் ராஷ்டிாிய லோக் தள் கட்சியின் அஜித் சிங்கை எதிா்த்து போட்டியிடுகிறாா்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close