தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 04:58 pm
chiranjeevi-allu-arjun-samantha-akkineni-and-more-celebs-cast-their-vote-in-elections-2019

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில், தெலுங்கு திரையுலக நட்சத்திரங்கள் பலர் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா, ஒடிஸா, அஸ்ஸாம், மேற்குவங்கம், ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட  மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கும் என, மொத்தம் 91 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதில், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான சீரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தெலுங்கு திரையுலக ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடிகளான நாகா சைத்தான்யா - சமந்தா தம்பதியும்,  பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமெளலியும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தாங்கள் வாக்குச்சாவடிக்கு வரும் புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இத்திரை பிரபலங்கள், அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்று தங்களின் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close