மக்களவை தோ்தல்- அப்போலோ மருத்துவமனை தலைவாின் மகளுக்கு நோ்ந்த நிலைமை

  ஸ்ரீதர்   | Last Modified : 11 Apr, 2019 05:30 pm
i-feel-cheated-says-apollo-chief-s-daughter-shobana

ஓட்டுப்போட ஆசை ஆசையாக வந்தால், வாக்காளர் பெயரில் என் பெயரே இல்லை. யாரை முட்டாளக்க பாா்க்கிறாா்கள் என்று அப்போலோ மருத்துவமனை தலைவா் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா கோபமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

நாடு முழுவதும் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலையிலிருந்து தொடங்கி நடக்கிறது. அதாவது 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்து வருகிறது. இத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது. 

ஷோபனா இன்று வாக்குபதிவு என்பதால் ஆந்திராவில் உள்ள அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா வந்திருந்தார். இவர் ஏற்கனவே வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்தவர். வாக்களிப்பதற்காக அதனை ரத்து செய்துவிட்டு வெளிநாட்டிலிருந்து வந்தார்.

அதன்படி வாக்குபதிவு ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வாக்குச்சாவடிக்கு ஷோபனா வந்துவிட்டார். ஆனால் அங்கே வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று சொன்னார்கள். பெயர் இல்லாததால் ஓட்டு போடவும் முடியாது என்று மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார் ஷோபனா.

உடனடியாக இது சம்பந்தமாக பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் என் வாழ்க்கையியே இன்றைய நாள் மோசமான நாள். ஒரு இந்திய குடிமகளாக நான் ஏமாற்றப்பட்டு உள்ளேன். நான் ஓட்டு போடறதுக்காக வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன். ஆனால் என் வாக்கு நீக்கப்பட்டிருக்கிறது.

என் வாக்கு எனக்கு முக்கியம் இல்லையா? யார் இங்கு அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்? இந்திய குடிமகளாக எனக்கு எதிராக இது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய குற்றம். இதை என்னால் எப்படி பொறுத்து கொள்ள முடியும், முடியவே முடியாது என்று ஆவேசமாக பேசி உள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close