நாடு முழுவதும் பாஜக ஆதரவு அலை : மோடி உற்சாக பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 02:55 pm
modi-government-wave-as-country-votes-in-first-phase-pm

தமது தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு நாடு முழுவதும் வலுவான ஆதரவு அலை வீசிக் கொண்டிருப்பதை தம்மால் இன்று உணர முடிவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலம், சிலிகாரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி பேசியது:
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் பொதுமக்கள் உற்சாகமாக பங்கேற்று, தங்களின் வாக்குகளை செலுத்திவருவதை காணும்போது, எனது தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு (மோடி சர்க்கார்) ஆதரவாக, நாடு முழுவதும் வலுவான அலை வீசிக் கொண்டிருப்பதை என்னால் கண்கூடாக உணர முடிகிறது.
மோடி தலைமையிலான ஆட்சியே மீண்டும் வர வேண்டும் என்ற எண்ணம் வாக்காளர்களின் மத்தியில் மேலோங்கி உள்ளதையும் அறிய முடிகிறது எனவும் மோடி கூறினார்.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close