பா.ஜ., வெற்றியை பாகிஸ்தான் விரும்புகிறது: கெஜ்ரிவால் ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 05:52 pm
pakistan-carried-out-pulwama-attack-to-benefit-pm-modi-says-delhi-cm-arvind-kejriwal

"மக்களவை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பமாக உள்ளது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கும், நம் பிரதம் நரேந்திர மாேடிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. மாேடிக்கு உதவவே, பாகிஸ்தான் ராணுவம், நம் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது" என, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:  "ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பாகிஸ்தான் ஆதரவுடன் தான், நம் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது, மத்திய பா.ஜ., அரசுக்கு முன்கூட்டியே தெரியும். மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பாக்., பிரதமர் இம்ரான் கானின் விருப்பமாக உள்ளது. 

இரு நாட்டு பிரதமர்கள் இடையே ரகசிய நட்பு உள்ளது. அதன் காரணமாகவே, தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேர்தல் சமயத்தில் பார்த்து, புல்வாமாவில், பாக்., ராணுவ உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் மெஹபுபா முப்தி, கர்நாடக முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவருமான குமாரசாமி உள்ளிட்டோர் இதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close