தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த புதிய இந்தியர்கள்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 06:45 pm
coochbehar-the-people-in-queue-in-dinahata-sub-division-are-voting-as-indian-citizens-for-the-first-time

மேற்கு வங்க மாநிலம், கூச்பெஹார் தொகுதிக்குட்பட்ட தினாஹட்டா பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர், மக்களவைத் தேர்தலில்  இன்று முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கடந்த 2015 -ஆம் ஆண்டில், வங்கதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை ஒப்பந்தத்தின்படி,  அந்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 9,776 பேர் இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் குடியேறி அவர்களின் பெயர்கள், அந்த மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

"புதிய இந்தியர்கள்" என அழைக்கப்படும் இவர்கள்,  மக்களவைத் தேர்தலில் இன்று முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இன்றைய முதல்கட்ட வாக்குப்பதிவில், மேற்கு வங்க மாநிலத்தின் கூச்பெஹார், அலிபூர்துவார்ஸ் ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close