இன்றைய தேர்தலில் குறைவாக வாக்குப்பதிவான மாநிலம் இதுதான்!

  Newstm Desk   | Last Modified : 11 Apr, 2019 08:37 pm
poll-percentage-of-first-phase-election

மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில், திரிபுராவில் அதிகபட்சமாக 81.8% பேரும், குறைந்தபட்சமாக, பிகார் மாநிலத்தில் 50% பேரும் வாக்களித்துள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிஸா, மேற்கு வங்கம், ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 91 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தொகுதிகளில் மொத்தமுள்ள 13.6 கோடி வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செலுத்துவதற்காக, மொத்தம் 1.7 லட்சம் வாக்குச்சாவடி  அமைக்கப்பட்டிருந்தன.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜூ உள்பட மொத்தம் களத்தில் உள்ள 1,279 வேட்பாளர்களில் இருந்து, தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக, இம்மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்களது வாக்குகளை இன்று பதிவு செய்தனர்.

மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு விவரம் (சதவீதத்தில்):

ஆந்திரம் (25 தொகுதிகள்) - 66

தெலங்கானா (17 தொகுதிகள்) - 60

உத்தரப் பிரதேசம் (8 தொகுதிகள்) - 63.69

மகாராஷ்டிரா ( 7 தொகுதிகள்) - 56

பிகார் ( 4 தொகுதிகள்) - 50

ஒடிஸா (4 தொகுதிகள்) - 68

உத்தரகண்ட் (5 தொகுதிகள்) - 57.85 

அஸ்ஸாம் ( 5 தொகுதிகள்) - 68

மேற்கு வங்கம் (2  தொகுதிகள்) - 81

ஜம்மு -காஷ்மீர் (2 தொகுதிகள்) - 54.49

சத்தீஸ்கர் (ஒரு தொகுதி) - 56

திரிபுரா (ஒரு தொகுதி) - 81.8

இறுதி நிலவரத்தை பொருந்து இந்த வாக்குப்பதிவு சதவீதம் சற்று மாறலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close