சோனியாவின் சொத்து மதிப்பு ரூ.11.82 கோடி !

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 07:10 am
sonia-s-property-rs-11-82-crores

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நேற்று (11ஆம் தேதி) ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.  அதில், தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 29 லட்சமும், ரொக்கம் ரூ.60 லட்சமும், வங்கியில் டெபாசிட்டாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  2014-ம் ஆண்டு மக்களைவத் தேர்தலின்போது, சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 28 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close