மேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில் மறுவாக்குப்பதிவு நடத்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 02:49 pm
political-parties-demand-re-polling-in-wb-s-cooch-behar

மேற்கு வங்க மாநிலத்தின் கூச் பெஹார் தொகுதியில் உள்ள 170 வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வன்முறையை கையாண்டதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளதுடன், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இடதுசாரிக் கட்சிகள், காங்கிரஸ், பாஜக ஆகியவை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. இத்தொகுதியில் இடதுசாரிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஃபார்வர்டு பிளாக் வேட்பாளர் கோபிந்த ராய் தாக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏராளமான வாக்குச்சாவடிகளில் தங்களின் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சுமார் 700 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக முறையிட்டுள்ளது.

கூச் பெஹார் தொகுதியில் மொத்தம் 2,010 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் பதற்றம் மிகுந்த 700 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினரும், 1,310 வாக்குச்சாவடிகளில் மாநில காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close