இந்த வேட்பாளரின் பேங்க் பேலன்ஸ் வெறும் 500 ரூபாய் தானாம்... நீங்க நம்பிதான் ஆகணும்!

  கிரிதரன்   | Last Modified : 12 Apr, 2019 08:50 pm
election-2019-for-1st-phase-at-richest-poorest-candidates-details

ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிஸா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நேற்று முதல்கட்ட தேர்தல் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,  டிஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 1,285 பேர் களம் கண்டுள்ளனர். இவர்களில் வெற்றி வாகை சூட போகிறவர்கள் யார் யார் என்பது மே மாதம் 23 -ஆம் தேதி தெரிந்துவிடும்.

இந்த நிலையில், முதல்கட்ட தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன.  வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கலின்போது சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள சொத்து மதிப்புகள் குறித்த விவரங்களின் அடிப்படையில், ஜனநாயக மறுசீரமைப்பு எனும் தன்னார்வ அமைப்பு (ஏடிஆர்) இத்தகவலை வெளிப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களிலேயே அதிகம்சொத்துக்கள் வைத்துள்ள கோட்டீஸ்வர வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே. வி.ரெட்டி (கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி) திகழ்கிறார்.

தெலங்கானா மாநிலம், செவெல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இவர், தமது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.895 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
இதில், தமது பெயரில் உள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 223 கோடி என்றும், தமது  மனைவியும், அப்பல்லோ மருத்துவமனையின் இணை மேலாண் இயக்குநருமான சங்கீதா ரெட்டியின் பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 613 கோடி எனவும் கூறியுள்ளார்.

இவருக்கு நேர்மாறாக,  இதே தொகுதியில் போட்டியிடும்  ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் நல்லா பிரேம் குமார், தன்னுடைய சொத்து மதிப்பாக, வங்கிக் கணக்கில் வெறும் 500 ரூபாய் தான் உள்ளதென தெரிவித்துள்ளார். 23 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்துக்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடுவோரில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 401 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர். இதில் அதிகபட்சமாக காங்கிரஸைச் சேர்ந்த 69 பேரும், பாஜகவின் 65 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர். 

இவர்களுக்கு அடுத்தப்படியாக தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜென சேனா, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) ஆகிய கட்சிகளில் முறையே 25 ,22, 17, 17 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close