ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை- காங்கிரஸ் அறிவிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 07:43 pm
rahul-gandhi-wanted-alliance-arvind-kejriwal-stymied-done-deal-congress

மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் பிரிந்து பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. காங்கிரஸ் தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயிலும், இதுபோன்ற நிலைதான் காணப்பட்டது.

இதையடுத்து டெல்லி விவகாரத்தை கையாளுவதற்காகவும், ஆம் ஆத்மியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.சி. சாக்கோவை நியமித்து அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடனும், டெல்லி பிரதேஷ் காங்கிரஸ் தலைவர்களுடன் பிசி சாக்கோ பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அந்த பேச்சு வார்த்தை இன்று முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்தது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார். அதன்படி, டெல்லியில் உள்ள தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் போட்டியிடுவதென இரு தரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைவர்களிடம் பேசி அவர்களையும் ஏற்றுக்கொள்ள வைத்தோம். இருந்தபோதிலும், பஞ்சாப் மற்றும் அாியானா  மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கூட்டணியில் இடம் ஒதுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

டெல்லியில் உள்ள அரசியல் சூழ்நிலையும், பஞ்சாப் மற்றும் அாியானா மாநிலங்களில் உள்ள சூழ்நிலையும் வெவ்வேறானது. எனவே, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க இயலாத நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில்லை, தனித்தே போட்டியிடுவதென என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது என பிசி சாக்கோ செய்தியாளர்கள் மத்தியில் அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close