அகதிகளாக குடியேறியுள்ள இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்கு குடியுரிமை - அமித் ஷா

  ஸ்ரீதர்   | Last Modified : 12 Apr, 2019 07:24 pm
will-weed-out-all-infiltrators-but-protect-hindu-sikh-and-buddhist-refugees-amit-shah-in-bengal

மக்களவைத் தேர்தலை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் அகதிகளாகக் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்களை இந்திய தேசத்தின் குடிமக்களாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

அங்கு கூட்டத்தில் பேசிய அவர், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், அங்கு வாழ இயலாத சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த மதங்களைச் சார்ந்தவர்கள் கட்டாய மத மாற்றத்துக்கு தொடர்ந்து ஆளாக்கப்படுகிறார்கள்.

மேலும் இத்தகையவர்களின் மக்கள் தொகை எண்ணிக்கையானது அந்த நாடு விடுதலையடைந்ததிலிருந்து மிகக் கடுமையாகக் குறைந்து வருகிறது. அவர்கள் அங்கு வாழ இயலாத சூழல், அந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகிறது.

எனவே, அவர்கள் நம் நாட்டிற்குள் அகதிகளாக குடியேறி வருகிறார்கள். இவர்களது குடியேற்றப் பிரச்னைக்கு நிரந்தரமாக ஓர் தீர்வை காண வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. ஏனெனில் அவர்கள் நம் நாட்டின் கலாசாரத்தை பின்பற்றி வருபவர்கள்.  அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகரீதியிலான கடமை நமக்கு உள்ளது

ஓர் குடிமகனாக அவர்களது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென்று நான் நினைக்கிறேன். எனவே, மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததும், மேற்கு வங்கத்தில் உள்ள இந்து, சீக்கிய மற்றும் பவுத்த மதங்களைப் பின்பற்றி வரும் அகதிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை இந்நாட்டு மக்களாக்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அவரது தேர்தல் பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close