சாதனை அளவை நெருங்கிய வாக்குப்பதிவு..! எங்கு தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 11:43 pm
meghalaya-71-37-is-the-final-voting-percentage

மேகலாயாவில், மக்களவைத் தேர்தலில் 71.37  சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், இங்கு ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங், துரா ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவ்விரு தொகுதிகள் உட்பட பல்வேறு மாநிலங்களில், மொத்தம் 91 தொகுதிகளுக்கு நேற்று, மக்களவைத் தேர்தல், முதல்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது.

இதில், மேகலாயா மாநிலத்தின் இரு தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 71.37 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது எனவும், மக்களவைத் தேர்தல் வரலாற்றில், அம்மாநிலத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவீதம் இது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அங்கு ஆண்களை விட பெண்களே அதிக அளவு வாக்களித்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close