மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 69.43%

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 10:20 am
lok-sabha-polls-first-phase-poll-percentage-is-69-43

மக்களவைத் தேர்தலையொட்டி, நாடெங்கிலும் 91 தொகுதிகளில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 69.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணையம் இத்தகவலை நேற்றிரவு அறிவித்துள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்பட 18 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொகுதிகளில் 4.20 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் களத்தில் மொத்தம் 1,279 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவில் 69.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டில் 9 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலின் மொத்த வாக்கு சதவீதம் 66.44 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close