ராகுலின் ஹெலிகாப்டரை தரையிறக்க மம்தா அரசு அனுமதி மறுப்பு - பிரசாரம் ரத்து

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 10:32 am
west-bengal-govt-denied-permission-to-land-rahul-s-helicopter-meeting-cancelled

மேற்கு வங்க மாநிலத்தின் சிலிகுரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை பிரசாரம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டரை காவலர் மைதானத்தில் தரையிறக்க மம்தா அரசு அனுமதி மறுத்தது.

இதனால் ராகுலின் பிரசாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான ஷங்கர் மலாகர் தெரிவித்தார். ராகுலின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை காவல்துறையினரும் உறுதி செய்தனர்.

சிலிகுரி மாநகர காவல்துறை ஆணையர் பி.எல்.மீனா இதுகுறித்து கூறும்போது, “குறிப்பிட்ட சில காரணங்களொன் அடிப்படையில் நாங்கள் அனுமதி மறுத்தோம். சில சட்ட விதிகள் இதை அனுமதிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் மாற்று ஏற்பாட்டுடன் அணுகவில்லை’’ என்றார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close