தேர்தலுக்குப் பிறகு அகிலேஷ் உடனான கூட்டணியை மாயாவதி முறித்துக் கொள்வார் - பாஜக ஆருடம்

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 11:02 am
maywati-will-break-alliance-with-sp-after-lok-sabha-polls-bjp

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அகிலேஷ் யாதவ் உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முறித்துக் கொள்வார் என்று பாஜக தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹர்தோய் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேஷ் அகர்வால் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாளே அகிலேஷ் உடனான கூட்டணி முறிந்ததாக மாயாவதி அறிவிப்பார். இதற்கு பிறகு அகிலேஷ் யாதவ் தெருவில் ஓட வேண்டியிருக்கும்.
முகலாய பேரரசில் ஜாஃபர் ஷா ரங்கீலா கடைசி மன்னராக இருந்ததைப் போல, யாதவ் குடும்பத்தினரின் கடைசி மன்னராக அகிலேஷ் யாதவ் இருப்பார்’’ என்றார் அவர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close