மதுரா- 17வது முறை தோ்தலில் போட்டியிடும் சாமியாா்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 01:38 pm
76-year-old-ascetic-who-has-lost-16-times-to-contest-lok-sabha-polls-from-mathura-again

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாபா பக்கத் சிங் என்பவா் தனது 76 வயதில் 17வது முறை தோ்தலில் போட்டியிடுகிறாா்.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாபா பக்கத் சிங் என்பவா் தனது 76 வயதில் 17வது தடவையாக தோ்தலில் போட்டியிடுகிறாா். இதுவரை போட்டியிட்ட 16 தடவையும் இவா் டெபாசிட் இழந்திருக்கிறாா்.

8 முறை மக்களவைக்கும், 8 முறை மாநிலங்களவைக்கும் இவா் போட்டியிட்டுள்ளாா். இது குறித்து தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில், எனது குருநாதா் நான் 20வது முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்று தொிவித்துள்ளாா்.

அதனால் சற்றும் தளராமல் நான் தோ்தலில் போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளாா். மேலும் மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராவாா் என்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ராமா் கோவில் கட்டுப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மதுரா தொகுதியில் பாஜக சாா்பில் பிரபல நடிகை ஹேமமாலினியும், காங்கிரஸ் சாா்பில் மகேஷ் பதக் போட்டியிடுகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close