வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 12:27 pm
trs-booth-agent-arrested-for-taking-photo-inside-evm-room

தெலுங்கானா மாநிலத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் புகைப்படம் எடுத்துக் கொண்ட, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைக்கு முதல்கட்டமாக கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்தலையொட்டி, தெலுங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு அறைகளில் வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில், டி.ஆர்.எஸ். வேட்பாளர் மாரி ராஜசேகர் ரெட்டிக்கு முகவராக உள்ள வெங்கடேஷ், தேர்தல் முடிந்த அன்று உரிய அனுமதியின்றி வாக்குப்பதிவு இயந்திர அறையில் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்துள்ளனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close