ஜாலியன்வாலாபாக் நினைவு தினத்திலும் காங்கிரஸ் அரசியல் செய்துவிட்டது - பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 12:54 pm
pm-modi-election-campaign-in-kashmir-s-kathuva

ஜாலியன்வாலாபாக் நினைவுதின நிகழ்விலும் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் இன்று அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “ஒட்டுமொத்த நாடும், ஜாலியன்வாலாபாக் நினைவு தினத்தை நேற்று அனுசரித்துக் கொண்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அதையும் அரசியலாக்கிவிட்டது. ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற அரசு நிகழ்வில் துணைக்குடியரசுத்தலைவர் கலந்துகொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆனால், பாஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் முதல்வர் அங்கு அப்போதைக்கு இல்லை.

அவர் ஏன் வரவில்லை தெரியுமா? ஏனென்றால், காங்கிரஸ் தலைவருக்கு விஸ்வாசம் காட்டுவதில் அவர் ஆர்வமாக இருந்தார். ஜாலியன்வாலாபாக்கிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சென்றார் அவர். ஆனால், துணைக்குடியரசுத்தலைவரின் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து சிந்திக்கவில்லை. தேசபக்திக்கும், கட்சிக்கான பக்திக்கும் இடையேயுள்ள வித்தியாசம் இதுதான். 

ஆனால், முதல்வர் அமரீந்தர் சிங்கை எனக்கு நெடுங்காலமாக தெரியும். அவரது தேசபக்தி குறித்து நான் ஒருநாளும் கேள்வி எழுப்பியதில்லை. ஆனால், கட்சித் தலைமைக்கு விஸ்வாசம் காட்டுமாறு அவருக்கு எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’’என்றார் மோடி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close