நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்- நடிகை ஹேமமாலினி நம்பிக்கை

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 01:38 pm
pm-modi-will-help-me-win-ls-poll-again-says-hema-malini

எனது செயல்பாடுகளும், பிரதமர் மோடியும் நான் வெற்றி பெற உதவி செய்யும் காரணங்கள் என்று நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

எனது சிறப்பான செயல்பாடுகளும், பிரதமர் மோடியும் நான் வெற்றி பெற உதவுவார்கள் என மதுரா தொகுதி பா.ஜ.க வேட்பாளரும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில், நான் நல்ல பல பணிகளை தொகுதிக்காக செய்துள்ளேன். அதனால் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 

பா.ஜ.க அரசும் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. மக்கள் எனக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள். மீண்டும் மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி புதிய அரசு அமையும். ஒட்டுமொத்த சிஸ்டமும் மாறி உள்ளது. 

மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து மக்கள் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்களும் பிரதமர் மோடி தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள் என்று தொிவித்துள்ளாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close