ஹேமமாலினியை ஆதரித்து கணவர் தர்மேந்திரா தீவிர பிரசாரம்

  ஸ்ரீதர்   | Last Modified : 14 Apr, 2019 03:39 pm
dharmendra-campaigns-for-hema-malini-in-mathura

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் நடிகை ஹேமமாலினியை ஆதரித்து அவரது கணவர் தர்மேந்திரா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். 

பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மக்களவை தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.

இந்த தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியுள்ள பணிகள் மற்றும் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஹேமமாலினியின் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்து வந்த பிரபல முன்னாள் பாலிவுட் கதாநாயகனும், ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா இன்று அவரை ஆதரித்து மதுரா தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close