தே.ஜ., கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெறும்: ராம்தாஸ் அதவாலே கணிப்பு

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 07:03 pm
nda-will-win-more-than-350-seats-ramdas-athawale

மக்களவை தேர்தலில், மத்தியில் ஆளும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான, தேசிய ஜனநாய கூட்டணி, 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். நரேந்திர மாேடி, மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பார் என, இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த ராம்தாஸ் அதவாலே கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து, அமைச்சர் அதவாலே குறியதாவது: "உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைத்துள்ளது. ஆனாலும், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எனவே, எதிர்க் கட்சிக்கு ஆதரவான ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது. அந்த மாநிலத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு, 65 இடங்களில் வெற்றி கிடைக்கும். 

அதே போல், வரும் மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி. 350 இடங்களில் வெற்றி பெறும். பா.ஜ.,வை சேர்ந்த நரேந்திர மாேடியே மீண்டும் பிரதமர் பொறுப்பேற்பார்" என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close