பாஜகவில் மனைவி... காங்கிரசில் சகோதரி... இது கிரிக்கெட் வீரர் வீட்டு அரசியல் !

  கிரிதரன்   | Last Modified : 15 Apr, 2019 08:27 am
ravindra-jadeja-s-wife-joins-bjp-but-his-father-and-sister-join-congress

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி, பாஜகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரது தந்தையும், சகோதரியும் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவீந்திர ஜடேஜா, குஜராத் மாநிலம், ஜாம்நகரைச் சேர்ந்தவராவார். இவரது மனைவி ரிவாபா, கடந்த மாதம் 3 -ஆம் தேதி பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் மற்றும் அவரது சகோதரி நைனபா நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ஜாம்நகர் காங்கிரஸ் வேட்பாளர் முலு கண்டோரியா முன்னிலையில் அவர்கள் இருவரும் காங்கிரசில் தங்களை இணைத்து கொண்டனர்.

பாஜகவில் மனைவி, காங்கிரசில்  சகோதரி என ரவீந்திர ஜடேஜா வீட்டு அரசியல் சபாஷ் சரியான போட்டியாக உள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர்.

குஜராத்  மாநிலத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 23-ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close