ராம்பூரில் துகிலுரிக்கப்பட்டார் திரௌபதி - முலாயம் சிங்கிடம் சுஷ்மா முறையீடு

  Newstm Desk   | Last Modified : 15 Apr, 2019 10:51 am
sushma-swaraj-condemns-azam-khan-compared-jaya-prada-with-draupathi

நடிகையும், பாஜக வேட்பாளருமான ஜெய பிரதா குறித்து சமாஜ்வாதி வேட்பாளர் ஆசம் கான் தெரிவித்துள்ள ஆபாசமான கருத்து குறித்து அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கிடம், சுஷ்மா ஸ்வராஜ் முறையிட்டுள்ளார்.

ராம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயப்பிரதாவை எதிர்த்து, பொதுமக்களிடையே ஆசம் கான் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டபோது, “உங்களுக்குத்தான் அவரை (ஜெயப்பிரதா) தெரிந்து கொள்ள 17 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், அவர் காக்கி நிற உள்ளாடைதான் அணிந்துள்ளார் என்பதை நான் 17 நாள்களிலேயே கண்டுபிடித்துவிட்டேன்’’ என்று கூறியிருந்தார்.

அவரது இந்த ஆபாசமான வர்ணனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “முலாயம் அண்ணா. சமாஜ்வாதி குடும்பத்தின் மூத்த தலைவர் நீங்கள். ராம்பூரின் திரௌபதி உங்கள் முன்னாலேயே துகிலுரிக்கப்பட்டுள்ளார். பீஷ்மரைப் போல மௌனமாக இருந்துவிடாதீர்கள். அந்தத் தவறைச் செய்ய வேண்டாம்’’ என்று சுஷ்மா கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close