நோட்டா ஓட்டு வேஸ்டா? : வாக்காளர்களே உஷார்!

  விசேஷா   | Last Modified : 19 May, 2019 02:46 pm
those-who-want-to-vote-for-nota-kindly-read-the-article-carefully-actually-there-is-no-value-for-nota

வாக்காளர்கள், தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லையென்றால், அவர்கள் நோட்டாவில் தங்கள் வாக்கை செலுத்தலாம் என்ற நடைமுறை அனைத்து வகை தேர்தல்களிலும் பின்பற்றப்படுகிறது. 

ஆனால், நோட்டாவிற்கு எத்தனை வாக்குகள் கிடைத்தாலும் அவற்றிற்கு எந்த மதிப்பும் கிடையாது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. நோட்டாவில் விழும் வாக்குகளால், மறு தேர்தல் நடத்த வைக்க முடியாது என்பதோடு, போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை எந்த வகையிலும் பாதிக்காது. 

ஆம், ஒரு தொகுதியில் மாெத்தம், 10 ஆயிரம் ஓட்டுகள் பதிவாகின்றன என வைத்துக்கொண்டால், அதில், நோட்டாவிற்கு, 3,000 ஓட்டுகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முறையே, 2,500, 2,000, 1,500, 500, 400, 100 ஓட்டுகள் கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். 

அந்த தொகுதியில், 2,500 ஓட்டுகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆம், அவரை விட அதிக ஓட்டுகள் பெற்ற நோட்டாவிற்கு எந்த மதிப்பும் கிடையாது. 

எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என அதிகம் பேர் நோட்டாவிற்கு ஓட்டளித்தாலும், அதற்கு அடுத்தபடியாக யார் அதிக வாக்குகள் பெற்றுள்ளாரோ, அவரே வெற்றி பெற்றவராக கருதப்படுவார். 

நோட்டாவிற்கு அதிக வாக்குகள் கிடைப்பதால், அந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எந்த சட்டமும் இல்லை என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனவே, நோட்டாவிற்கு வாக்களிப்பதை விட, போட்டியிடும் வேட்பாளர்களில், எவர் தகுதியானவர் என்பதை சிந்தித்து வாக்களிப்பதே சிறந்ததாக கூறப்படுகிறது. 

நோட்டா ஓட்டுகள் கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் அதிக ஓட்டுகள் பதிவானால், அந்த தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் மீண்டும் போட்டியிட தடை விதிக்கப்பட்டு, மறு தேர்தல் நடத்த உத்தரவிடலாம் என சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே, நோட்டாவிற்கு ஓட்டளிப்பதில் பலன் இருக்கும் என்றகின்றனர், தேர்தல் கள ஆய்வாளர்கள்.

neewstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close