ரேஷன் கார்டை அடையாள சான்றாக கொண்டு வாக்களிக்க முடியுமா?

  கிரிதரன்   | Last Modified : 15 Apr, 2019 03:31 pm
ration-card-not-acceptable-proof-of-identity-to-vote

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, தமிழகத்தில் வரும் வியாழக்கிழமை (ஏப்.18)  நடைபெறவுள்ளது.

தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்த, பேருந்து நிலையங்கள்,  கடை வீதிகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைப்பது, பத்திரிகைகளில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிடுவது என தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சமூக ஊடகங்களின் தாக்கம் காரணமாக, பொதுமக்கள் மத்தியிலும் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும் துரதிருஷ்டவசமாக, வாக்களிக்க தேவையான அடிப்படை அடையாள சான்றான வாக்காளர் அடையாள அட்டை பொதுமக்கள் சிலரிடம் இருப்பதில்லை. 

இதுபோன்றவர்கள் தங்களது கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வங்கி- அஞ்சலக சேமிப்பு கணக்குப் புத்தகங்கள், அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான அட்டை, ஆதார் அட்டை  உள்ளிட்ட புகைப்படத்துடன்கூடிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அடையாள சான்றாக அளித்து வாக்களிக்கலாம்.

இருப்பினும், இந்த அடையாள சான்றுகளின் பட்டியலில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வராது. எனவே, ரேஷன் கார்டை அடையாள சான்றாக கொண்டு ஒருவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close