முதல்வர், மாஜி முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 05:03 pm
yogi-adityanath-barred-from-campaign-for-72-hours-mayawati-for-48-hours

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தற்காலிக  தடை விதித்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. 

அந்த வகையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில், ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில், உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர், சகரன்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவா்கள் இருவரும் சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இவ்விரு தலைவர்களிடமும் விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.  இதற்கு இரு தலைவா்களும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளை காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு, அதாவது 2 நாட்களுக்கு மாயாவதி பிரசாரம் செய்யக்கூடாது என்றும்,  நாளை காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது  என்றும் இடைக்கால தடை விதித்து தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close