வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்துள்ள கட்சிகளில் மாயாவதியின் பிஎஸ்பி முதலிடம்

  ஸ்ரீதர்   | Last Modified : 15 Apr, 2019 05:40 pm
bsp-has-biggest-bank-balance-among-parties-with-rs-670-crore-in-accounts

அரசியல் கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே அதிகளவாக 670 கோடி ரூபாயை வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த வரவு-செலவு கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், 2018 டிசம்பர் 13ம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு கட்சியின் வங்கி இருப்புத்தொகை எவ்வளவு என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி முதலிடத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி, தலைநகர் மண்டலத்தில் உள்ள 8 பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்துள்ளதாகவும், அவற்றில் மொத்தம் 669 கோடி ரூபாய் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், 95.54 லட்ச ரூபாய் ரொக்கமாகக் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலைத் தொடர்ந்து அக்கட்சியின் வங்கி இருப்பில் 11 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்துபோயுள்ளது. 

இந்த நிலையில், 196 கோடி ரூபாயுடன் 3வது இடத்தில் காங்கிரஸ் கட்சியும், 107 கோடி ரூபாயுடன் தெலுங்கு தேசம் கட்சி 4வது இடத்திலும் உள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close