வயநாட்டில் போட்டியிடுவது ஏன்? - ராகுல் காந்தி விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 12:09 pm
rahul-gandhi-explained-why-he-contesting-in-kerala

கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவே தென்னகத்தில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது குறித்து பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கேரள மாநிலத்தின் கொல்லம் தொகுதியில் அவர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, “வட இந்தியாவில் உள்ள அமேதி தொகுதியில்தான் நான் எப்போதும் போட்டியிட்டு வருகிறேன். ஆனால், இந்த முறை கேரளாவில் போட்டியிடுவதன் மூலமாக தென்னிந்தியாவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினேன். இந்தியா என்பது ஒற்றை கண்ணோட்டத்தின் அடிப்படையில், ஒற்றை சிந்தனையின் அடிப்படையில் அமைந்தது அல்ல; அது ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான வெவ்வேறு சிந்தனைகள் மற்றும் கண்ணோட்டங்களை உள்ளடக்கியது. அது நமக்கு மிக முக்கியமானது’’ என்றார் ராகுல் காந்தி.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close