திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 17 Apr, 2019 11:10 am
election-commission-postpones-polls-for-tripura

திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. 

திரிபுராவில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக இல்லை என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரியும் சிறப்பு காவல் கண்காணிப்பாளரும் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இதையடுத்து நாளை நடக்கவிருந்த திரிபுரா மக்களவைத் தொகுதி தேர்தலை வரும் 23ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.  இதனிடையே கடந்த ஏப்ரல் 11ம் தேதி திரிபுரா மாநிலம் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 

இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்தது  தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் 464 வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தவும் கோரி தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close